வியாழன், நவம்பர் 29, 2012

டெங்கு காய்ச்சல்

முஹர்ரம்-15 - 30-11-2012
முன்னுரை – அல்லாஹ்வின் நாட்டத்தினால் தான் எல்லாம் நடைபெறுகிறது. அதன்படி நோய்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகிறது என்றாலும் சில நோய்களுக்கு சில காரணங்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அந்த வகையில் சமீப காலமாக பரவி வரும் ஜுரங்கள் இவ்வாறு தான். முன்பெல்லாம் காய்ச்சல் வந்தால் ஊசி போடுவார்கள். மருந்து சாப்பிடுவார்கள். அதை அவ்வளவு சீரியசாக யாரும் கருத மாட்டார்கள். ஆனால் இப்போது காய்ச்சல் வந்தாலே இது என்ன காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. இந்த நோய்கள் வராமல் தடுப்பதற்கு அன்றாடம் பத்திரிக்கைகளில் வரும் ஆலோசனைகளையும், அந்த ஆலோசனைகளை இஸ்லாம் என்றைக்கோ நமக்கு வழங்கியுள்ளதையும் ஒப்பிட்டுப் பேசுவோம்.
இது மாதிரி நோய்கள் சுகாதாரச் சீர்கேட்டினால் தான் பரவுகிறது என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாகும். சுகாதாரம் என்பது இஸ்லாத்தில் அதிகம் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வணக்கங்கள் சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது..
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ (222)البقرة) عَنْ جَابِرِ رض قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلاَةُ وَمِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ(ترمذي) عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلي الله عليه وسلم تَنَظَّفُوا بِكُلِّ ما اسْتَطَعْتُمْ فإنَّ الله تَعالى بَنَى الإِسْلاَمَ على النَّظافَةِ ولَنْ يَدْخُلَ الجَنَّةَ إلاَّ كُلُّ نَظِيفٍ (كنز العمال)
அழுக்கான சட்டை அணிந்து வந்தவரை நபி ஸல் கண்டித்ததும், நீளமான மீசை வைத்திருந்தவரை எச்சரித்ததும், தாடியை ஒழுங்கு படுத்தக் கூறியதும், நீளமாக நகம் வளர்த்தக் கூடாது என அறிவுறுத்தியதும் சுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது
சுத்தமின்மை பிறரையும் பாதிக்கும்
عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَقَرَأَ الرُّومَ فَالْتَبَسَ عَلَيْهِ فَلَمَّا صَلَّى قَالَ مَا بَالُ أَقْوَامٍ يُصَلُّونَ مَعَنَا لَا يُحْسِنُونَ الطُّهُورَ فَإِنَّمَا يَلْبِسُ عَلَيْنَا الْقُرْآنَ أُولَئِكَ (نسائ) باب الْقِرَاءَةُ فِي الصُّبْحِ بِالرُّومِ-كِتَاب الِافْتِتَاحِ
சுத்தம் இல்லாத இடங்கள் தான் பெரும்பாலும் ஷைத்தான்களின் வசிப்பிடம்
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ رضي الله عنه عَنْ النبي صلى الله عليه وسلم قَالَ إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ1 فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلاَءَ فَلْيَقُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ ابوداود
நோய் பரவாமல் இருக்க வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை
عن أنس رضي الله عنه قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غسل الإناء وطهارة الفناء2 يورثان الغناء (كنز العمال)
عن عَامِر بْن سَعْد عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا (أُرَاهُ قَالَ) أَفْنِيَتَكُمْ3 وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ (ترمذي) بَاب مَا جَاءَ فِي النَّظَافَةِ- كِتَاب الْأَدَبِ
நுழைவாயில் மலக்குகள் நுழையும் வழி என்பதால் அதன் சுத்தம் கூறப்பட்டுள்ளது. மற்றபடி வீடு முழுவதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே கருத்தாகும். ஆனால் இன்று மாற்று மதத்தவர்கள் அதிகாலை எழுந்து வீட்டையும், வீட்டு வாசலையும் சுத்தப்படுத்தும் அளவுக்கு முஸ்லிம்கள் பலர் செய்வதில்லை. இதனால் முஸ்லிம் என்றால் வீடு தர தயங்குகின்றனர். நமக்கு சொல்லப்பட்டதை நாம் விட்டு விட, மற்றவர்கள் அதை கடைபிடித்து முன்னேறி வருகின்றனர்.
நாம் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக் கொள்வது
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَفَعَهُ قَالَ خَمِّرُوا الْآنِيَةَ4 وَأَوْكُوا الْأَسْقِيَةَ5 وَأَجِيفُوا الْأَبْوَابَ6 وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ فَإِنَّ الْفُوَيْسِقَةَ7 رُبَّمَا اجْتَرَّتْ الْفَتِيلَةَ8 فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ (بخاري)كتاب بدء الخلق
குறிப்பு -மேற்படி ஹதீஸில் பாத்திரங்களை மூடி வையுங்கள் என்ற கூறியதன் நோக்கங்களில் ஒன்று திறந்து கிடக்கும் பாத்திரத்தில் கிருமிகள் விழுந்தால் அந்தக் கிருமிகளால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாகும். திறந்தே கிடக்கும் திண்பண்டங்களை சாப்பிடக் கூடாது என்பதும் இதில் அடங்கும்
அன்று எலியை சின்னப்பாவி என்று நபி ஸல் கூறியுள்ளார்கள். இன்று எலிக்காய்ச்சல் குறித்து மருத்துவர்களின் எச்சரிக்கை
ஹெப்படிடிஸ் ஈ வகை வைரஸ் கிருமி எலி மூலமாக பரவுகிறது. இதனை எலிக் காய்ச்சல் என்று கூறுவார்கள். பாதாள சாக்கடையில் தான் எலிகள் அதிகம் இருக்கின்றன. இந்த எலிகளைத் தாக்கும் பாக்டீரியா கிருமிகள் எலியின் சிறுநீர் வழியாக வெளியேறும். அந்தச் சிறுநீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மழைக்காலத்தில் தண்ணீரில் கலந்துவிடும். இதனால்தான் எலிக் காய்ச்சல் வருகிறது. இந்தக் காய்ச்சல் உயிரையே பலிவாங்கக்கூடியது என்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَمْسٌ مِنْ الدَّوَابِّ مَنْ قَتَلَهُنَّ وَهُوَ مُحْرِمٌ فَلَا جُنَاحَ عَلَيْهِ الْعَقْرَبُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ وَالْغُرَابُ وَالْحِدَأَةُ9 (بخاري)كتاب بدء الخلق عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْها قَالَتْ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَأْرَةٍ سَقَطَتْ فِي سَمْنٍ (أي في سمن جامد10) فَقَالَ أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ (بخاري) باب إِذَا وَقَعَتِ الْفَأْرَةُ فِى السَّمْنِ- كتاب الذبائح
உறையாத (திரவ வடிவத்தில் உள்ள) நெய்யில் எலி செத்துக்கிடந்தால் அதை நெருங்கவே வேண்டாம் என்ற ஹதீஸ்
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سُئِلَ عَنْ الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ فَقَالَ إِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلَا تَقْرَبُوهُ (ابوداود)باب الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ- كِتَاب الْأَطْعِمَةِ
எலியின் சிறுநீர் மட்டுமல்ல. பொதுவாகவே தேங்கிக் கிடக்கும் சிறுநீர்களில் இருந்து உருவாகும் நோய்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். . தேங்கிக் கிடக்கும் தண்ணீரே கிருமிகள் நிறைந்தது. அதில் சிறுநீரும் சேர்ந்தால்...
சமீப காலமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் கூட தேங்கிக் கிடக்கும் தண்ணீர், மற்றும் சிறுநீரில் இருந்து உருவாகும் கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீர் தேங்குவது பற்றி இஸ்லாம் கூறும் எச்சரிக்கை - சிறுநீர் தேங்கிக் கிடக்கும் வீட்டிற்குள் மலக்குகள் வர மாட்டார்கள்
عبد الله بن يزيد عن النبي صلى الله عليه و سلم قال لا يُنْقَعُ بول في طست في البيت فإن الملائكة لا تدخل بيتا فيه بول ينقع (طبراني)
தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்ற அறிவுரை
عَنْ جَابِرٍ رضي الله عنه عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ (مسلم) كتاب الطهارة
சிறுநீர் துளிகள் தன் மீது படும் விஷயத்தில் கவனக்குறைவாக இருந்தவருக்கு கப்ருடைய வேதனை
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ فَقَالَ أَمَا إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ وَأَمَّا الْآخَرُ فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ (وفي رواية وَكَانَ الْآخَرُ لَا يَسْتَنْزِهُ عَنْ الْبَوْلِ) قَالَ فَدَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا ثُمَّ قَالَ لَعَلَّهُ أَنْ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا بَاب الدَّلِيلِ عَلَى نَجَاسَةِ الْبَوْلِ- كِتَاب الطَّهَارَةِ
பொது இடங்களில் மலம், ஜலம் கழிப்பவர்களுக்கும், பொது இடங்களில் மல, ஜல அசுத்தத்தை கழுவுபவர்களுக்கும் எச்சரிக்கை.
عَنْ أَبِى هُرَيْرَةَ رض أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ اتَّقُوا اللَّعَّانَيْنِ3 قَالُوا وَمَا اللَّعَّانَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِى يَتَخَلَّى فِى طَرِيقِ النَّاسِ أَوْ فِى ظِلِّهِمْ (مسلم) كِتَاب الطَّهَارَةِ وفي رواية للطبراني"مَنْ سَلَّ سَخِيمَةً11 عَلَى طَرِيقٍ مِنْ طُرُقِ الْمُسْلِمِينَ فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلائِكَةُ وَالنَّاسُ أَجْمَعِينَ
டெங்குவை பரப்பும் கொசுக்கள் தேங்கிக் கிடக்கும் நீரில் இருந்தும், குப்பைகள், மற்றும் சாக்கடைகளிலிருந்தும் உருவாகுவதாக கூறுகின்றனர். குப்பைகளை அகற்றுவதை அல்லது அகற்ற ஏற்பாடு செய்வதை மிகச் சிறந்த அமலாக இஸ்லாம் கூறுகிறது
عَنْ أَبِى ذَرٍّ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ عُرِضَتْ عَلَىَّ أَعْمَالُ أُمَّتِى حَسَنُهَا وَسَيِّئُهَا فَوَجَدْتُ فِى مَحَاسِنِ أَعْمَالِهَا الأَذَى يُمَاطُ عَنِ الطَّرِيقِ وَوَجَدْتُ فِى مَسَاوِى أَعْمَالِهَا النُّخَاعَةَ12 تَكُونُ فِى الْمَسْجِدِ لاَ تُدْفَنُ (مسلم)باب النَّهْىِ عَنِ الْبُصَاقِ فِى الْمَسْجِدِ –كتاب المساجد
பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைத்தாலும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசி விட்டுச் செல்வது வழக்கமாகி விட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரும் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது உலகின் தூய்மையான நகரம் என பெயர் பெற்றுள்ளது.அங்கு கண்ட இடங்களில் குப்பையை வீசி விட்டு தப்ப முடியாது. முதல் தடவை இவ்வாறு செய்வோரை கைது செய்து அவர்களின் தகவல்களை கணிணியில் பதிவு செய்து எச்சரித்து அனுப்புவார்கள். 2-வது தடவை அதே தவறை செய்தால் 12 மணி நேர சமூக சேவை செய்தே தீர வேண்டும். மூன்றாவது தடவை என்றால் அபராதம்,ஜெயில். (தினகரன்
டெங்கு காய்ச்சல் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்
மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவுவதைப் போல ஏ.டி.ஸ். எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலமாக எளிதில் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். இக்கொசுவை இலகுவாக அடையாளம் காணும் வகையில் இதன் கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும். இக்கொசுக்கள் பெரும்பாலும் பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. இதற்கும் உடல்வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய் வந்தவர்களுக்கு கடுமையான மூட்டு வலி, உடல் வலி, தலைவலி, தோல் நமைச்சல் இருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது கூட தமிழ்நாட்டில் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு முதல் ஐந்து மடங்காக இருப்பதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கொசுக்களால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தை (நம்ரூதின் படையை) அல்லாஹ் அத்துள்ளான். காண்க 26-10-2012 பயான் குறிப்பு
சுகாதாரச் சீர்கேட்டால் நோய் வராதிருக்க அன்றே இறைத் தூதர் கூறிய ஆலோசனைகளை, இன்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
பாதாள சாக்கடைகள்தான் நோய்கள் பரவ முக்கியக் காரணம். எனவே சாக்கடைகள் நிரம்பி வழியும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கலாம். அதுபோன்ற சாக்கடைகளை உரிய அதிகாரியிடம் தெரிவித்து சரிசெய்ய வேண்டும். சுத்தமான உணவுகளைச் சாப்பிடுவதுடன் தெருக்களில் விற்கும் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. எப்போதும் தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும்.
சுகாதாரமற்ற உணவுகளை உண்ணக் கூடாது. கீழே விழுந்த உணவை எடுத்து சுத்தம் செய்து சாப்பிடவே இஸ்லாம் கூறுகிறது
عَنْ أَنَسِ رضي الله أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلَاثَ وَقَالَ إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الْأَذَى وَلْيَأْكُلْهَا وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الصَّحْفَةَ وَقَالَ إِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ يُبَارَكُ لَهُ (ابوداود) بَاب فِي اللُّقْمَةِ تَسْقُط-كتاب الاطعمة
சுகாதாரமான குடிநீரை பயன்படுத்த அறிவுறுத்தும் இஸ்லாம்
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُتَنَفَّسَ فِى الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ )ابوداود) باب فِى النَّفْخِ فِى الشَّرَابِ كتاب الأشربة عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ النَّفْخِ فِي الشُّرْبِ فَقَالَ رَجُلٌ الْقَذَاةُ أَرَاهَا فِي الْإِنَاءِ قَالَ أَهْرِقْهَا قَالَ فَإِنِّي لَا أَرْوَى13 مِنْ نَفَسٍ وَاحِدٍ قَالَ فَأَبِنْ الْقَدَحَ14 إِذَنْ عَنْ فِيكَ )ترمذي) بَاب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ النَّفْخِ فِي الشَّرَابِ- كِتَاب الْأَشْرِبَةِ
நீர் அருந்தும்போது பாத்திரத்துக்குள் மூச்சு விடுவதால் வாய், மற்றும் மூக்கில் இருந்து வெளிப்படும் கிருமிகள் நீரில் படும். அதனால் நீர் மாசுபடும். அந்த நீரை பருகினால் நோய்கள் உருவாகும் என்பதால் அது தடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கார்ப்பரேஷன் லாரிகளில் வரும் தண்ணீர், அசுத்தமான இடங்களுக்கு அருகில் எடுக்கப்படும் தண்ணீர், பல ஊர்களைக் கடந்து வரும் குழாய் நீர் ஆகியவற்றை காய்ச்சிப்.
டெங்கு காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் வராமல் இருக்க ஓதும் துஆ
عن أنس رضي الله أن رسول الله صلى الله عليه وسلم كان يقول اللهم إني أعوذ بك من البَرصِ والجُذام والجُنون وسَيِّءِ الْأَسْقَامِ (نسائ)كِتَاب الِاسْتِعَاذَةِ)
பொருள்- 1,ஷைத்தான்கள் வரும் இடம் 2,முன்வாசல் 3,சாபத்திற்குரிய இரு செயல்கள் 4, உணவுப்பாத்திரத்தை மூடி வையுங்கள் 5,தண்ணீர்ப்பையின் வாயை கட்டி வையுங்கள்6,கதவை மூடுங்கள் 7,சின்னப்பாவி (எலி) 8,திரி 9,தேள்,எலி,வெறிநாய்,காக்கை, பருந்து 10,உறைந்த நெய் 11,மல,ஜலத்தைக் கழுவுவது 12,எச்சில் 13,ஒரு மிடரில் என் தாகம் தீராது. 14,ஒரு மிடர் மட்டும் பருகு என்று நான் கூறவில்லை மாறாக ஒரு மிடர் குடித்த பின் கோப்பையை வாயை விட்டும் தள்ளி வைத்து மூச்சு விடு. பிறகு மீண்டும் பருகு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக