நாடறிந்த
பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,
காயல்பட்டணம் மஹ்லரா அரபிக்கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர்
மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் இன்று 20.12.121 இரவு 2.00 மணியளவில்
சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
சமீப காலமாகவே
அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி
சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே
இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:
(إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه
அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும்
அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று'' (புஹாரி. முஸ்லிம்)
அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?
அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்
إن
الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ
الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح100، ومسلم 2673].
நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (புஹாரி. முஸ்லிம்)
இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுவது:
قال ابن مسعود: عليكم بالعلم
قبل أن يرفع، ورفعه هلاك العلماء، والذي نفسي بيده ليودن رجال قتلوا في
سبيل الله أن يبعثهم الله علماء لما يرون من كرامتهم. [مفتاح دار السعادة
1/121].
يقول ابن مسعود: أتدرون كيف ينقص الإسلام؟ يكون في القبيلة عالمان، فيموت أحدهما فيذهب نصف العلم، ويموت الآخر فيذهب علمهم كله.
وعنه رضي الله عنه أنه قال:
(أتدرون كيف ينقص الإسلام ؟ قالوا: كما ينقص الثوب، وكما ينقص سمن الدابة،
وكما ينقص الدرهم. قال: إن ذلك لمنه. وأكبر من ذلك موت العلماء) [رواه
الطبراني، وقال الهيثمي: رجاله موثوقون. مجمع الزوائد 1/202]
- அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான தியாகிகள் கூட மறுமையில் ஆலிம்களாக எழுப்பப்படவேண்டுமென்று மிகவும் விரும்புவார்கள் ஏனெனில் மறுமையில் ஆலிம்களுக்கு அவ்வளவு மரியாதையும் சங்கையும் செய்யப்படும் என்பதை அறிந்துகொண்டதால்.
- ஆலிம்கள் மறைவதன் மூலம் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிடும்.
ஆலிம்களின் மறைவு அகிலத்தின் முடிவு:
{أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا} [سورة الرعد الآية (41)] قال سيّدنا عبدالله بن عباس رضي الله عنه: نقصانها خرابها، وخرابها بموت علمائها وفقهائها وأهل الخير منها.
பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு குர்ஆன் விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்:
பூமியிலுள்ள ஆலிம்களும் சட்டக்கலை நிபுணர்களும் நல்லவர்களும் குறைந்துகொண்டே வருவதுதான் இங்கு குறிப்படப்பட்டுள்ளது.
எனவே،
ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:
((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير
நபி ஸல் கூறினார்கள்:
ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு; நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட லேசானது. (தப்ரானி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக