இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. சிலரின்
வாழ்க்கை வசந்தம் வீசும் இன்பப் பூஞ்சோலையாகிறது, சிலரது வாழ்க்கையோ
வறுமையும், துன்பமும் சுழன்று தாக்க வாழ்க்கையே சோகமாகி சுட்டெரிக்கும்
பாலைவனமாக மாறிவிடுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனும் நினைக்கின்றான், தனக்கு
பிரச்சனையே வரக்கூடாது மற்றும் உலகின் சகல சுகமும் ஒருங்கே பெற்று
இன்பத்தில் உலா வரவேண்டும் என்று, அதுதான் மனித இயல்பும்கூட. வெளி உலகில்
வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சனை
வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த
பிரச்சனையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக்
கொள்ளும் தடுக்கப்பட்ட செயலைச் செய்யவும் துணிந்து விடுகின்றனர்.
பல இலட்ச மனித உயிர்களைக் கொன்று குவித்த கொடுங்கோலன்
ஹிட்லர் கூட இறுதியில் தோல்வியை தாங்கமுடியாமல் மனம் உடைந்து உணவுக்
கிடங்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சரித்திரம் நமக்கு
உணர்த்துகிறது. அன்றாடம் பத்திரிக்கைகளை புரட்டினால் இளம்பெண் தற்கொலை,
காதல் ஜோடிகள் தற்கொலை, கள்ளக் காதலினால் தற்கொலை, கடன் தொல்லை தாங்க
முடியாமல் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை, பரீட்சையில்
தோல்வியடைந்ததால் பள்ளி மாணவ-மாணவி தற்கொலை... என்று வகைவகையான தற்கொலை
செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி
நடந்தேறுவதை காண முடிகிறது.
இந்திய சுகாதார நிறுவனம் நடத்திய புள்ளி விவரத்தின்படி
இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு தற்கொலை இறப்பு
நிகழ்கிறது, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 240 இறப்பு தற்கொலையாய்
நிகழ்கின்றன. இந்தியாவிலேயே மிக அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்
மாநிலம் கேரளம் ஆகும். உலக தற்கொலை எண்ணிக்கையில் இந்தியாவின் பங்கு
பத்தில் ஒரு பங்கு ஆகும் (1/10). இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும்
இந்த தற்கொலை இறப்புக்கள் விலைவாசி போல் ஏறிக்கொண்டேதான் போகின்றன.
பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்றால் இன்று உலகில்
ஒருவரும் உயிர்வாழ முடியாது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு பிரச்சனை
இருந்துகொண்டுதான் இருக்கின்றது, இருக்கும். ஏழைக்கு பணப்பிரச்சனை என்றால்
பணக்காரனுக்கு உடல் பிரச்சனை. சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சனை என்றால்
சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள், இவ்வாறாக
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் உட்பட்டவனாகவே
வாழ்கின்றான். இன்னும் சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும்,
ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும்
எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆக, பிரச்சனை என்பது
தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல, ஊர் முழவதும், நாடு முழவதும் ஏன்! உலகம்
முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
மனிதன் என்று பிறந்துவிட்டால் அவனது வாழ்வில் பலவேறு
வழிகளில் இறைவன் சோதனை செய்வான் என்பதை இஸ்லாம் உணர்த்துகின்றது. இம்மையின்
சொற்ப கஷ்டங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு மறுமையில்
நிரந்தரமாய் சுவர்க்கத்தை இழக்க வேண்டுமா? சொல்லுங்கள் என் அன்பு
சகோதர-சகோதரிகளே!
أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا
يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم ۖ مَّسَّتْهُمُ
الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ
وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ ۗ أَلَا إِنَّ نَصْرَ
اللَّهِ قَرِيبٌ
உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா?
அவர்களை வறுமையும், பிணியும் பீடித்தன, தூதரும் அவருடன் விசுவாசம்
கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று கூறும்வரை
அலைக்கழிக்கப்பட்டனர்" தெரிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் உதவி மிகச்
சமீபத்தில் இருக்கின்றது (அல்குர்ஆன் 2:214)
இவ்வுலக பிரச்சனைகளுக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டால்
நமக்கு நிச்சயம் நரகம்தான் என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு
தெளிவுபடுத்துகிறது.
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும்
(கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (அன்றைய
தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர்
அவர்கள் தம் படையினரிடமும் திரும்பியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின்
தோழர்களிடையே ('குஸ்மான்' என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். அவர்,
(யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும்,
(படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும்விட்டுவிடாமல் அவர்களைப்
பின்தொடர்ந்து சென்று தம் வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக்
கொண்டிருந்தார். அப்போது, 'இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு)
தேவையை நிவர்த்தித்து போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை"
என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர்
நரகவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு
அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், 'நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப்
போகிறேன்" என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.
அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர்
விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற)
மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால்
அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை)
பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில்
வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை
செய்தார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்
வந்து, 'தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்றார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்ன அது?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்,
'இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று
முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், 'அவர்
விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு" என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத்
தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.)
பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர்
அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில்
(நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை
அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்" என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர்
சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர்
நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு
நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர்
சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்கள்.
புகாரி - 4203
சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே ! முஹம்மது நபி
(ஸல்) அவர்களை நேரில் கண்டு கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது
மட்டுமல்லாமல் அல்லாஹ்வுக்காக போர் செய்த ஒருவர் தற்கொலை செய்ததினால்
நரகவாதி என்றால் நாம் தற்கொலை செய்வோமேயானால் நம்முடைய நிலைமையென்ன?
அதுமட்டுமின்றி அல்லாஹ் யாரையும் அவனது தகுதியை மீறி சோதனை செய்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا
كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن
نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا
كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا
تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا
وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ
الْكَافِرِينَ
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள
முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே;
அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:)
"எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்
தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை
நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது
கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது
(நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!"
அதே சமயம் நீங்கள் உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் தீங்கினுடைய சிரமமோ மிக கொடியதாக இருக்குமென்பதையும் மறந்துவிட வேண்டாம்.
"எவர் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரோ
அவர் நரகத்தில் எப்பொழுதும் உயரமான இடத்திலிருந்து விழுந்து கொண்டே
இருப்பார், எவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாதோ அவரது கையில் விஷம்
இருக்கும் அதை நரகத்தில் எப்போதும் குடித்துக் கொண்டே இருப்பார், எவர்
இரும்பு ஆயுதத்தை கொண்டு தற்கொலை செய்து கொண்டாரோ அவர் கையில் அந்த இரும்பு
ஆயுதம் இருக்கும் அதைக் கொண்டு எப்போதும் நரகில் தன் வயிற்றை கிழித்துக்
கொண்டே இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :
அபூஹுரைரா(ரலி), நூல்கள்: அஹமது, அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.
நபிமார்களின் வரலாற்றை சற்று புரட்டிப்பாருங்கள் அவர்கள் பட்ட சிரமங்களை சிந்தித்துப்பாருங்கள்,
சுவர்க்கத்தில் தனது துணைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து
கொண்டிருந்த ஆதம் (அலை)அவர்கள் சுவர்க்கத்தை விட்டு துரத்தப்பட்டார்களே.
அத்தனை இன்பமும் ஒருங்கே கிடைக்கக்கூடிய சுவர்க்கத்தைவிட்டு ஒருவர்
துரத்தப்பட்டு ஒரு வேலை உணவிற்கும் நீ சிரமப்பட்டே தீர வேண்டுமென்ற
நிலைக்கு தள்ளப்பட்டார்களே.
கப்பலிலே பிரயாணம் சென்றுகொண்டிருந்தபோது யூனுஸ் (அலை)
அவர்கள் பாவம் செய்தவர்களென்று சொல்லி கடலிலே தள்ளப்பட்டு மீன்
வயிற்றுக்குள் சென்றார்களே.
அல்லாஹ்வால் ஹபீப் என்று அழைக்கப்பட்ட பெருமானார் முஹம்மது
நபி (ஸல்) அவர்கள் பார்க்காத சோதனைகளா? தாயிப் நகர மக்களால் கல்லால்
அடித்து விரட்டப்பட்டார்கள் என்பதை நாம் மறக்க முடியுமா? அல்லது பெற்ற கடனை
திருப்பி செலுத்தமுடியாமல் யூதனால் கழுத்து நெறிக்கப்பட்டார்களே! அதை
மறுக்க முடியுமா?
இவர்கள் அனைவரும் நமக்காக இத்தனை சோதனைகளை
ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இவர்கள்
சோதனைக்கு பயந்து தவறான முடிவெடுத்திருப்பார்களேயானால் இன்று நாமெல்லாம்
ராமசாமியாகவோ முன்னுசாமியாகவோ சிலைகளை வணங்கியிருப்போம் என்பதை நினைவில்
கொள்ளுங்கள்.
நாமென்ன இவர்களைப்போல் மற்றவர்களுக்காக பிரச்சனைகளை
சந்திக்கின்றோமா. நாம் நலமாக வாழ, நமது பிள்ளைகள் நலமாக வாழ, நமது
குடும்பம் நலமாக வாழவே சிரமப்படுகின்றோம்் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த 21ம் நூற்றான்றில் நபிமார்களின் வரலாற்றுடன்
நம்முடைய வாழ்க்கையை ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று எண்ணுகின்றீர்களா?
இதே நூற்றாண்டில் வாழக்கூடிய உங்கள் சோமாலிய சகோதரிகளை சற்று கவனியுங்கள்.
பெற்ற மகனுக்கு கொடுக்க உணவின்றி தனது கண்முன்னே மகனை தினம் தினம்
பரிகொடுத்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தாய்மார்களை பாருங்கள். இஸ்ரேல்
இராணுவத்தால் அழைத்து செல்லப்பட்ட மகன் உயிருடன் இருக்கின்றானா இல்லை
இறந்துவிட்டானா என்பது கூட தெரியாமல் தினம் தினம்
அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் பாலஸ்தீன சொந்தங்களை பாருங்கள்.இவர்களை
விட அதிகமாகவா நீங்கள் பிரச்சனைகளை சந்தித்துவிட்டீர்கள் தற்கொலை
செய்துகொள்வதற்கு.
உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் "நம் வாழ்வில் இன்பமும்
இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக்
கொள்ளும் போது" ஒவ்வொருவனும் 90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கின்றான்.
ஒரு 10% க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை
காட்டுகிறது" என்பதை புரிந்து கொள்வான்.
எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக்
கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி
ஏற்படுகின்றது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதும் ஓரு
மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப்
பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகின்றது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில்
மாட்டிக் கொள்வதில்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கீலைப் பார்க்க
வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.
ஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக
அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கின்றான். ஒரு 10% துன்பமும் வரும் என்பதை
மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன்
இருக்கின்றான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும்
நடந்து விடுகின்றன.
ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் இரு கைகளையும் பிடித்துக்
கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு
அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை
ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை "இப்படி சித்திரவதை செய்கிறாளே,
கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா? நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான்
இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.
ஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும்
பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை" என்று சொல்ல மாட்டார்கள். என்ன
சொல்வார்கள்? "குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து
சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த
மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும்,
அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள்
விளங்கிக்கொள்வார்கள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத்
தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான்
என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.
கல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய்
அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி
போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால
நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சனைகளில் எதிர்நீச்சல் போட்டு,
இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர
வேண்டும் என்கிற தூர நோக்கே, அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும்
தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க முடியும்?
நமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும்
சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு
வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், "நம்முடைய இறைவன் நம்மீது
வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு." என்று நீங்கள்
நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய
விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து
கொள்ளவில்லை என்று பொருள்.
அதே நேரத்தில் சற்று தூர நோக்கோடு, "இது எவனால்
தரப்பட்டிருக்கின்றது? இந்தச் சோதனையில் நாம் எப்படி நடந்து கோள்ள வேண்டும்
என்ற சிந்தனையின் பாற்பட்டு நீங்கள் இறைவனைச் சிந்திக்க தலைப்பட்டு
விடுவீர்களானால் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மிகச் சுலபமாக விடை
கிடைத்துவிடும்.
சரி நீங்கள் நினைப்பது போல பிரச்சனைகளே இல்லாத ஒரு
வாழ்க்கை எப்படி இருக்குமென்று என்றாவது சிந்தித்துப்பார்த்ததுன்டா?
சந்தோஷம் மட்டுமே நமது வாழ்க்கையாக இருக்குமென்றால் நிச்சயமாக நாம்
அனைவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது உங்களுக்கு
தெரியுமா?
மூஸா (அலை) அவர்களின் வரலாற்றை சற்று புரட்டிப்பாருங்கள்.
ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து மக்களை காப்பாற்றிய் அல்லாஹ் "மன்னு,
ஸல்வா" எனக்கூடிய மேன்மையான உணவை அவர்களுக்கு மேலிருந்து இறக்கிவைத்தான்.
ஆனால் அவர்களோ தலைசிறந்த அந்த உணவை, அல்லாஹ்வால் நேரடியாக
அனுப்பிவைக்கப்பட்ட அந்த உணவை விடுத்து கீரையையும், வெள்ளரிக்காயையும்,
கோதுமையையும், பருப்பையும், வெங்காயத்தையும் இறைவனிடத்திலே கேட்டு
அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு
மேற்கோள் காட்டுகின்றது.
وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ
وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ
مِن بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۖ قَالَ
أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ ۚ
اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ
الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ۗ ذَٰلِكَ
بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ
النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوا وَّكَانُوا
يَعْتَدُونَ
2:61. இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க
மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன்
வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன்
வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம்
எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு
பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள்
ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது
நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும்
இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன; மேலும் அல்லாஹ்வின்
கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள்
அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை
செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு
செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும்
ஏற்பட்டது.
ஆக உங்களது வாழ்வில் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் இன்பம்
மட்டுமே இருக்குமெனில் மூஸா (அலை) அவர்களுடைய மக்களுக்கு ஏற்பட்டது போல
மிகப்பெரிய இன்பம் சந்தோஷம் கூட மிக சாதரணமான விஷயமாகவே தோன்றும் என்பதை
நியாபகத்தில் கொள்ளுங்கள்.
எப்படி பசித்திருப்பவனுக்கே உணவினுடைய அருமை தெரியுமோ
அதுபோல துன்பத்தை அனுபவிப்பவனுக்கே உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.
அதனால்தான் 30 நாட்கள் நோன்பிருந்து அல்லாஹ்விற்காக பசித்திருந்த பிறகே
நாம் பெருநாள் கொண்டாடுகின்றோம்.நாளை மறுமை நாளிலே நரகத்தின் மேலே
போடப்பட்டிருக்கும் பாலத்தை கடந்தே நீங்கள் சுவர்க்கத்திற்குள் நுழைய
முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நரக நெருப்பின் வேதனை உங்களுக்கு
சுவர்க்கத்தின் இன்பத்தை பலமடங்கு அதிகப்படுத்தும். ஒருவேலை நீங்கள்
நரகத்தை பார்க்காமலேயே சுவர்க்கத்திற்கு செல்வீர்களாயின் உங்களுக்கு
சுவர்க்கம் கூட அற்பமாகத்தான் தெரியும் (அல்லாஹ் பாதுகாப்பானாக) என்பதே
உண்மை.
இன்னும் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து அதன்
மூலம் மிகப்பெரிய செல்வாக்கை பெற்ற மனிதர்களை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வினால் பல சோதனைக்குள்ளாகி நம்ரூத்
என்னும் கொடியவனால் நெருப்பிலே தூக்கி வீசப்பட்டார்கள், தனது மனைவி ஹாஜிரா
(அலை) அவர்களையும் பால்குடி மறவா இஸ்மாயில் (அலை) அவர்களையும் யாருமில்லா
பாலைவனத்திலே அல்லாஹ்விற்காக விட்டுவிட்டு வந்தார்கள், மேலும் வேறொரு
சமயம் தனது மகனை அல்லாஹ்விற்காக பலிகொடுக்க முயன்றார்கள்.அவர்கள் அன்று
அனுபவித்த துன்பத்தை சிறப்பிக்கும் விதமாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) நின்ற
இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக்கி அவர்களை சிறப்பித்தான் என்பதை
பின்வரும் இறைவசனம் நமக்கு தெரிவிக்கின்றது.
وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ
فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ
وَمِن ذُرِّيَّتِي ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ
2:124. (இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை
அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக
நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக)
ஆக்குகிறேன்" என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் "என் சந்ததியினரிலும்
(இமாம்களை ஆக்குவாயா?)" எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள)
அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا
وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَا إِلَىٰ
إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ
وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ
2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; "கஃபா என்னும்)
வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும்
ஆக்கினோம்;இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக
நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் "என்
வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள்,
ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்"
என்றுஇப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி
வாங்கினோம்.
ஹாஜிரா (அலை) இஸ்மாயீல் (அலை)அவர்களுடன் தன்னந்தனியாக
அரபு பாலைவனத்திலே அல்லாஹ்வின் அறிவிப்பின்படி இப்ராஹீம் (அலை) அவர்களால்
விடப்படுகிறார்கள். ஹாஜிரா (அலை) அவர்களிடமிருந்த தண்ணீரோ தீர்ந்துவிட்டது.
சிறு குழந்தையான இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வழியில்லை.
இருப்பதோ பாலைவனம். தண்ணீருக்காக ஸஃபா என்னும் குன்றிலுருந்து மர்வா
என்னும் இன்னொரு குன்றிற்கு தண்ணீர் தேடி ஓடுகிறார்கள். ஒரு முறையல்ல
இரண்டு முறையல்ல ஏழு முறை ஓடுகிறார்கள். அதன் பிறகே அல்லாஹ் அவர்களுக்கு
தண்ணீரை வழங்குகின்றான்.
இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும்
மர்வாவுக்குமிடையே செய்கின்ற சஃயு (தொங்கோட்டம்) ஆகும். சற்று
சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே! அன்று அல்லாஹ்வுக்காக சிரமப்பட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வோ உலக முடிவு நாள்வரை அவர்களைப் போல நம்மை ஓடவைத்து
அவர்களுக்கு மிகப்பெரிய சிறப்பைக் கொடுத்துவிட்டான். நீங்கள் ஆணாக
இருந்தாலும் சரி இல்லை யாராக இருந்தாலும் சரி ஹாஜிரா (அலை) என்னும்
பெண்ணைப்போல ஓடினால் தான் உங்களுடைய வழிபாடு அங்கே ஏற்றுக்கொள்ளப்படும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப்பட்ட மக்களுக்கு
மத்தியில் இறை தூதுவராக வந்தார்கள் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து
வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி,
மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி
பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம். ஏராளமான மூட
நம்பிக்கைகளுடன் முட்டிமோதிக்கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம்.
முரட்டு இனம். யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல்
காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம். இதனாலேயேதான் "காட்டரபிகள்" என்றும்
அவர்கள் அன்று வருணிக்கப்பட்டார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை சொல்லால் அடித்தார்கள்,
கல்லால் அடித்தார்கள், இன்னும் மக்கா நகரைவிட்டே துரத்தினார்கள்.ஆனால்
அவர்களின் துன்பம் எவ்வளவு பெரியதொரு மாற்றத்தை அரேபிய மக்களிடையே
கொண்டுவந்தது என்பதை என்றாவது சிந்தித்து பார்த்திருக்கின்றோமா?
அதுநாள் வரை "நீங்கள் யார்?" என்று கேட்டால் எந்த
இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், எந்த கோத்திரத்தினர்கள் என்றெல்லாம்
பட்டியலிட்டுக்கொண்டிருந்தவர்கள், அதன்பின் "நாங்கள் முஸ்லிம்கள்" என்கிற
ஒரு சொல்லில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள். குர் ஆனை
ஓதவேண்டும் என்கிற விருப்பம் காரணமாகவே அரபியில் எழுதப்படிக்கக் கற்கத்
தொடங்கினார்கள். கல்வி பயிலத் தொடங்கியதனாலேயே தமது கலாசாரச் செழுமை
புரிந்தவர்களானார்கள். கலாசாரபலம் உணர்ந்ததனாலேயே அதனைக் கட்டிக்காக்க
வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார்கள்.
காட்டரபிகள்!
இனி யார் அப்படிச் சொல்லிவிடமுடியும்?
இன்று முஸ்லிம் அல்லாத யூத கிருத்துவ வரலாற்று
ஆசிரியர்கள் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்களை அனைத்து உலக தலைவர்களுக்கும்
மேலானவராக குறிப்பிடுகின்றார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க
முடியாமல் நிகழக் கூடியவையே. அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர்
ஒருவர் இல்லாவிடினும் சரியே. உதாரணமாக ஸைமன் பொலீவர்
பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள்
தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். காந்தி இல்லாவிடினும்
பிரிட்டனிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றுத்தானிருக்கும்.
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என்று ஒருவர்
வரவில்லையெனில் இன்னும் அவர்கள் காட்டரபிகளாகவேதான் வாழ்ந்து
கொண்டிருந்திருப்பார்கள் என்பதை அனைத்து வரலாற்று ஆசிரியர்களும்
ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.
மேலும் படைக்கப்பட்ட சமுதாயங்களிலேயே மிகவும் சிறந்த
சமுதாயமாக நாம் இருக்கின்றோம் என்பதை இறைவன் திருமறையிலே பின்வரும்
வசனத்தில் அறிவிக்கின்றான்.
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ
بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ ۗ
وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَّهُم ۚ مِّنْهُمُ
الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்)
சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்
செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும்
அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும்
(உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு
நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;
எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாகிய நம்மை ஏன் வல்ல
இறைவன் சிறந்த சமுதாயமாக அறிவித்தான் என்பதை சிந்தித்ததுண்டா? இப்ராஹீம்
(அலை) அவர்களின் மக்கள் சிலை வணங்குபவர்களாக இருந்தார்கள். லூத் (அலை)
அவர்களின் மக்கள் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தார்கள். மூஸா (அலை) அவர்களின்
காலத்திலிருந்த ஃபிர்அவ்ன் தன்னையே கடவுள் என்று சொல்லிக்கொண்டான்.
ஆனால் நம்முடைய சமுதாயம் எப்படிப்பட்டது என்பதை
சிந்தித்துப்பாருக்கள் சகோதரர்களே! சிலை வணங்குபவனும் இங்கே உண்டு.
விபச்சாரம் செய்பவனும் உண்டு. சூதாடுபவனும் உண்டு. ஓரினச்சேர்க்கைக்கு கொடி
பிடிப்பவனும் உண்டு. தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய
சாய்பாபாக்களும் பிரேமானந்தாக்களும் இங்கே உண்டு. அதுமட்டுமின்றி
வழிகெட்டுப்போவதற்குறிய அனைத்து வழிகள் நம் கைக்கெட்டும் தூரத்தில் உண்டு.
இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் வாழ்ந்துகொண்டு அல்லாஹ்வுக்கு பயந்து
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சொல்படி நடக்கின்றோமே அதனால்தான் நமக்கு
நம்முடைய சமுதாய மக்களுக்கு அல்லாஹ் மிகப்பெரிய சிறப்பை வழங்கியுள்ளான்
என்பதை புரிந்துகொள்ளுங்கள் சகோதரர்களே!
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ
الصَّابِرِين
َ
"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்,
பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்,
ஆனால் பொறுமையுடையேர்க்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன்
2:155)
அல்லாஹ் உங்களை சோதிப்பது உங்களை மேன்மைபடுத்துவதற்காகவேயன்றி வேறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே !!!
அல்லாஹ் நம் அனைவரையும் தற்கொலையை விட்டும் பாதுகாத்து நேரான வழியில் செலுத்துவானாக! ஆமீன்.
வாழ்க்கை வாழ்வதற்கே !!!
படிப்பட்ட மக்களுக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக